இந்தியாவை வீழ்த்தி உலக சாம்பியனாக முடிசூடியது இலங்கை!
பிரித்தானியாவில் நடந்த 7வது கேரம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை ஆண்கள் அணி இந்தியாவை வீழத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
பர்மிங்காமில் நடந்த ஆண்களுக்கான இறுதி சுற்றில் இலங்கை அணி 2-1 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.
இலங்கை வீரர் சமில் குரே 25-8, 25-12 என்ற கணக்கில் இந்திய வீரர் சங்கராவை வீழ்த்த இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதனையடுத்து, இலங்கை வீரர் Mohamed Sherrifdeen 7-25, 4-25 என்ற கணக்கில் இந்திய வீரர் ரியாஸிடம் தோல்வியடைந்தார்.
இறுதியில் உலக சாம்பியனான இலங்கை வீரர் Nishantha Fernando இந்திய வீரர் சந்தீப்பை வீழ்த்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 2-1 என இந்தியாவை வீழ்த்தி ஆண்களுக்கான 7வது கேரம் உலக சாம்பியன்ஷிப் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகளிர் பிரிவில் நடந்த இறுதி சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி உலக சாம்பியனாக முடிசூடியது. இலங்கை மகளிர் அணி இரண்டாம் இடம் பிடித்தது.
இந்தியாவை வீழ்த்தி உலக சாம்பியனாக முடிசூடியது இலங்கை!
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment