ஏழைகளின் மரியாள் சபை எனும் தொண்டு நிறுவனம் வைபவரீதியாக....படங்கள் இணைப்பு
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பொதுமண்டபத்தில் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-30 மணியளவில் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அவர்களின் தலைமையில் ஏழைகளின் மரியாள் சபை எனும் தொண்டு நிறுவனம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைப்பின் ஸ்தாபகர் அருட்சகோதரி யேசுமேரி அருளப்பன் அவர்களினால் சுமார் 04 வருடங்களாக முள்ளிக்குளம் மறிச்சுக்கட்டி கிராமங்களில் இயங்கி வந்த போதும் 06- 11-2016 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மங்களவிளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வில் குருமுதல்வர் விக்ரர் சோசை அவர்களின் தனது உரையில் மன்னார் மண்ணிற்கு இவ்வாறான தொண்டு நிறுவனங்கள் தற்போதைய தேவையாக உள்ளது அருட்சகோதரி அவர்களின் இம்முயச்சி பாராட்டுக்குரியது ஏனெனில் கிறிஸ்துவப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டு ஏழைகள் மட்டில் கருணை கொண்டு செயாலாற்ற முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதும் வாழ்த்துதலுக்குரியதும் ஆகும் என்றார்.
இவ்வமைப்பின் ஸ்தாபகர் தனது உரையில் என்னால் அன்றி என்னுள் இருந்து செயலாற்றும் எல்லாம் வல்ல இறைவனால் நிகழ்த்த்ப்படுகின்ற நல்ல காரியம் இக்காரியத்தில் இணைந்து செயலாற்ற இறைவன் அருளால் ஒன்று கூடியுள்ளோம் ஏழை மக்களுக்கான பணிகள் தொடரும் இணைந்திருப்போம் என்றார்,
இவ்வமைப்புக்கான நிர்வாகத்தெரிவும் அமைப்பின் யாப்பு சட்டங்கள் சேவை நோக்கம் விடையப்பரப்பு ஏழை மாணவர்கள் மாணவிகள் மக்கள் முதியோர்கள் மட்டில் அக்கறையுடன் செயலாற்றுதல் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

ஏழைகளின் மரியாள் சபை எனும் தொண்டு நிறுவனம் வைபவரீதியாக....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 07, 2016
Rating:

No comments:
Post a Comment