யாழில் அதிசயம்..! கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!
யாழ். குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வெளிவருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் தொடக்கம் இவ்வாறு பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் செபமாலை பிரார்த்தனை வழிபாடுகள் கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் குறித்த தேவாலயத்தில் மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அதிசயம்..! கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!
Reviewed by Author
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment