புத்துயிர்பெற்ற துயிலுமில்லங்கள் கல்லறைகள் இருந்த இடத்தில் கதறியழுத உறவுகள்-Photos
தமிழின விடுதலைக்காக இலட்சிய வேட்கையுடன் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் வடக்கு - கிழக்கில் பெரும் உணர்வுபூர்வமாக இடம் பெற்றன.
மாவீரர் துயிலுமில்லங்களுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று தமது உறவுகள் விதைக்கப்பட்ட இடங் களில் தீபம் ஏற்றி மண்ணில் புரண்டு அழுதனர். இந் நினைவு நிகழ்வுகளால் வடக்கு - கிழக்கு ஏழு வருடங்களின் பின்னர் நேற்றையதினம் எழுச்சி பெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைக் காக களமாடி உயிர்துறந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நேற்றையதினம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் நாடுகளிலும் பெரும் எழுச்சியுடன் புலிகள் காலத்தில் ஒலித்த மாவீரர் பாடல்களுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் பெரும் எழுச்சி கொண்ட மாவீரர் தினமாக இந்த வருட மாவீரர் தினம் அமைந்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் முன்னைய வருடங்களில் எழுச் சிகரமாக மாவீரர்தினம் அனுஷ் டிக்கப்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்கில் இம்முறையே மக்கள் எழுச்சியடைந்துள்ளனர்.
யாழ்.பல்கலைக் கழக சமூகத்தினரால் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர் தின நினைவுகூரல் வடக்கு கிழக்கு எங்கும் பெரும் எழுச்சியை தோற்றுவித்தது.
யுத்தத்தின் பின்னர் மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன. இதன் காரணமாகவும் அப்போது காணப்பட்ட அரசியல் சூழ்நிலைகள் காரணமாய் துயிலுமில்லங்களில் வழி பாடுகள், அஞ்சலிகள் இடம்பெற வில்லை. எனினும் கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம், முழங்காவில் துயிலுமில்லங்கள் மற்றும் வடமராட்சியிலுள்ள உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், பண்டி விரிச்சான் துயிலுமில்லங்கள் என்பன பொது மக்களினால் சிரமதானம் செய்யப்பட்டு நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகச்சுடர் ஏற்றியிருந்தனர்.
யாழ்.மாவட்டத்தில் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலும், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ் சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில், மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னாரில் பண்டிவிரிச்சான், ஆட்காட்டி வெளி, மாவீரர் துயிலுமில்லங்களிலும், முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் போன்ற இடங்களிலும் அலம்பில் மாவீரர் துயிலுமில்லத்தி லும், வவுனியாவில் பொங்கு தமிழ் நினைவு தூபி முன்பாகவும், குருமன்காட்டில் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் அலுவலகங்களில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வு களே வடக்கில் பிரதானமான நிகழ்வுகளாக அமைந்திருந்தன.
கிழக்கில் அம்பாறை, கிழக்கு பல்கலைக்கழகம்,மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்திலும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலு வலங்களிலும் மற்றும் பொது இடங் களிலும் பரவலாக நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் தின உருக்கமான நிகழ்வுகள். மாவீரர்களது பெற்றோர்கள், சகோதரர்கள் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க துயிலுமில்லங்களில் விளக்கேற்றினர். சில தாய்மார்கள் துயிலுமில்லங்களில் உடைக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட கல்லறைகளை கட்டியணைத் துக் கதறி அழுதது அனைவரது கண்களையும் கண்ணீர்க் குளமாக்கியது.
புத்துயிர்பெற்ற துயிலுமில்லங்கள் கல்லறைகள் இருந்த இடத்தில் கதறியழுத உறவுகள்-Photos
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment