பலவிதமான மாற்றங்களைக் கண்ட ஆண்டு 2016 – சம்பந்தன்
பலவிதமான மாற்றங்களைக் கண்ட ஓர் ஆண்டின் நிறைவையும் நத்தார் தினத்தையும் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கை வாழ் கிறிஸ்தவமக்களுக்கு எனது இனிய நத்தார் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,
மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும்.
தங்கள் குடும்பத்தாரோடும், உறவினர்களோடும் இந்தப் பண்டிகை நாட்களைக் கொண்டாடுகின்ற தருணத்தில் இழப்பிலும், தனிமையிலும் வாடும் உறவுகளையும் எமது மனதில் நினைத்துக்கொள்ள மறவாதிருப்போமாக.
ஒப்புரவாகிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் முன்செல்கின்ற இந்தத்தருணத்தில் மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த நத்தார் தினத்திலே அனைத்து இலங்கை வாழ் மக்களும் உண்மையான சமாதானத்தையும், நம்பிக்கை இழந்து வாழ்பவர்கள் ஒரு புதிய நம்பிக்கையை நத்தார் செய்திக்கூடாக கண்டுகொள்ளவும் வேண்டும் என வாழ்த்துகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண அரசிற்கு அதிகாரங்கள் இருந்தும், அதற்கான அமைச்சுக்கள் இருந்தும், அவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தும், எதையும் திட்டமிட்டு முடிக்காமல், வந்த நிதியை திருப்பி அனுப்பி கொண்டு, எல்லாம் மத்திய அரசாங்கமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து புலம்பிக் கொண்டு இருப்பது நிலைமையை முன்னேற்ற எந்த வகையிலும் உதவாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பலவிதமான மாற்றங்களைக் கண்ட ஆண்டு 2016 – சம்பந்தன்
Reviewed by Author
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment