அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நகரசபையின் 2017 பாதீடு மக்களின் பார்வைக்கு

வவுனியா நகரசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுக்கான 6 கோடியே 83 இலட்சம் ரூபா பெறுமதிக்கு இவற்றில்மேற்கொள்ளப்பட்டுள்ள பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 21 ஆம் திகதியில் இருந்து 26 ஆம் திகதிவரை நகரசபையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இப்பாதீட்டில் ஏதேனும் ஆட்சேபனைகள் இரப்பின் கருத்துக்களை கூற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பாதீட்டில்,

வட்டாரம் 1 இல் குடியிருப்பு உள்ளக வீதி வாடிகாலமைப்புக்கு இருபது இலட்சமும், குடியிருப்பு வீதி இருபக்க திருத்தத்திற்கு ஐந்து இலட்சமும், பூந்தோட்டம் மயான திருத்தம் மற்றும் மதில் அமைத்தலுக்கு முப்பது இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வட்டாரம் 2 இல் கோழிக்கடை குளவீதி திருத்தத்திற்கு பத்து இலட்சமும் துவிச்சக்கரவண்டி தரிப்படம் அமைத்தலுக்கு இருபது இலட்சமும் நகர மாட்டிறைச்சிக்கடை திருத்தத்திற்கு பத்து இலட்சமும் பஸார் உள்ளக வீதி வடிகாலமைப்புக்கு பத்து இலட்சமும்  வீதி கல்லட்டு தாரிடல் மற்றும் வடிகாலமைப்புக்கு இருபது இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட்டாரம் 3 இல் அன்னை திரேசா வீதி கல்லிட்டு தாரிடலுக்கு இருபது இலட்சமும் சகாயமாதாபுரம் உள்ளக வீதி கல்லிட்டு தாரிடலுக்கு இருபது இலட்சமும் சகாயமாதாபுரம் வீதி இருபக்க வீதி திருத்தத்திற்கு ஐந்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டாரம் 4 இற்கு சூசைப்பிள்ளையார்குளம் வீதி உள்ளகவீதி கல்லிட்டு தாரிடல் இருபது இலட்சமும் சூசைப்பிள்ளையார்குளம் வீதி இருபக்க திருத்தத்திற்கு ஐந்து இலட்சமும் சூசைப்பிள்ளையார்குளம் வீதி வடிகாலமைப்புக்கு பத்து இலட்சமும் ஞான வைரவர் கோவில் வீதி கல்லிட்டு தாரிடலுக்கு இருபது இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் 5 இல் வைரவர் கோவில் வீதி அமைத்தலுக்கு இருபது இலட்சமும் குருமன்காடு பூங்கா மதில் அமைத்தலும் சிற்றுண்டிசாலை அமைத்தலும் பதினைந்து இலட்சமும் குருமன்காடு நகரசபை காணியில் முதியோர் பூங்கா மதில் அமைத்து வாயில் அமைத்தலுக்கு பதினைந்து இலட்சமும் வைரவபுளியங்குளம் வீதி இருபக்க திருத்தத்திற்கு ஐந்து இலட்சமும் குருமன்காடு உள்ளக வீதி இருபக்க வடிகாலமைப்புக்கு பத்து இலட்சமும் மாதிரி உறைவிட வீதி 2 வாடிகாலமைப்புக்கு பத்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் 6 இல் வெளிக்குளம் பிள்ளையார் கோவில் வீதி கல்லிட்டு தாரிடல் பதினைந்து இலட்சம் ரூபாவும் வட்டாரம் 7 இல் திருநாவல்குளம் 5 ஆம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல் இருபது இலட்சமும் திருநாவல்குளம் உள்ளக வீதி பாலம் அமைத்தல் இருபத்தைந்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வட்டாரம் 8 இல் கோவில் புதுக்குளம் 10 ஆம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடலுக்கு இருபது இலட்சமும் வட்டாரம் 9 இல் மூன்று முறிப்பு பாடசாலை கல்லிட்டு தாரிடலுக்கு பத்து இலட்சமும் தோனிக்கல் 3 ஆம் ஒழுங்கைக்கு கல்லிட்டு தாரிட பதினைந்து இலட்சமும் தேக்கந்தோட்டம் மயான வேலி அமைத்தல் ஐந்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் 10 இல் பண்டாரிகுளம் முதலாம் ஒழுங்கை (விபுலாநந்தா பாடசாலை முன்புறம்) வடிகாலமைப்பு பத்து இலட்சமும் வட்டாரம் 11 இல் பட்டானிச்சூர் 2 ஆம் ஒழுங்கை கல்லிடடு தாரிடல் பதினைந்து இலட்சமும் பட்டானிச்சூர் முதலாம் ஒழுங்கை வடிகாலமைப்பு ஐந்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீதி விளக்கு பொருத்தலுக்கு பத்து இலட்சமும் வீதி திருத்தப்பொருட்கள் கொள்வனவுக்கு பத்து இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நகரசபை அபிவிருத்தி வேலைத்திட்டததிற்கு ஐம்பத்தேழு இலட்சமும் ஏனைய நூலக மற்றும் பாதுகாப்பு சேவை கட்டணங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் 2017 பாதீடு மக்களின் பார்வைக்கு Reviewed by NEWMANNAR on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.