அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகத்தில் இரவுக்கடமையில் பணியாற்றிய 3 பேர் மற்றும் பணியாற்றியவர்களில் ஒருவரின் சகோதரர் ஆகிய நால்வரையும் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் கடமை புரியும் இளைஞனை கடத்திச் சென்று தாக்கி வீதியில் விட்டுச் சென்றமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய பேருந்தும் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட இளைஞன் 26 வயதான த.சுபராஜ் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்துள்ளதுடன், கடத்தியதாக கூறப்படும் பேருந்தினையும் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது Reviewed by NEWMANNAR on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.