அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதி மன்றத்தில் இது வரை 215 சட்ட விரோத வழக்குகள் மன்னார் மதுவரித்திணைக்களத்தினால் தாக்கல்.(📷📸)

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 215 சட்ட விரோத வழக்குகள் மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

-குறித்த வழக்குகள் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடித்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி சாரயம்,கள்ளு,பியர் போற்றவை விற்பனை செய்தல்,சட்ட விரோதமான முறையில் கஞ்சா போதைப்பொருட்களை தன் வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட 215 வழக்குகள் மன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-மேலும் மன்னார் பகுதியில் 187 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதிகளும்,மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றததில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இதே வேளை கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் 4 இலட்சத்து 1671 லீட்டர் பியர் (மோல்ட்) வகை குடிபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

10 ஆயிரத்து 747 லீட்டர் வெளிநாட்டு மது வகைகளும்,4 இலட்சத்து 7271 லீட்டர் அரச சாராய வகைகளும் நுகர் வோரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

-அனுமதிப்பத்திரம் பெற்ற மது விற்பனை நிலையங்களுக்கு எதிராக 31 குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டப்பணமும் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-

(22-12-2016)

மன்னார் நீதி மன்றத்தில் இது வரை 215 சட்ட விரோத வழக்குகள் மன்னார் மதுவரித்திணைக்களத்தினால் தாக்கல்.(📷📸) Reviewed by NEWMANNAR on December 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.