அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திர நிலையமாக மாறும் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள்...


வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் போதைப்பொருட்கள் வியாபாரம் நடைபெறும் ஒரு கேந்திர நிலையமாகக் காணப்படுகிறது. இதனால் நாம் விழிப்பாக செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சரான அமீரலி சுட்டிக்காட்டினார்.

மன்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்காக எதிர்வரும் ஆண்டில் எனது நிதியில் 15 இலட்சம் ரூபாயினை சாதாரணதர, உயர்தர மாணவர்களை அழைத்து நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தினை ஜனவரியில் ஆரம்பிக்க இருக்கின்றோம்.

போதைபொருள் பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் தற்போது 3 ஆம் இடத்தில் இருக்கின்றது.

இதன் காரணமாக வறுமை எனும் கொடிய நோய் எங்களை துறத்துகின்றது.


இதனை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் சமூர்த்தி அதிகாரிகள், கிராம சேவக அதிகாரிகள் மக்கள் மத்தியில் இது தொடர்பான விளிப்புணர்வினை ஏற்படுத்தி வறுமையை குறைக்க முன்வரவேண்டும் என வலியுருத்தினார்.


மேலும் எதிர்காலத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உடன்பாடு கண்டு எமது மாவட்டத்தில் முடிந்தவரை விட்டுக்கொடுத்து சந்தோசமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.


இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் பிரதேசசபையின் செயளாலர் உட்பட பொலிஸ் நிலைய அதிகாரிகள், திணைக்களங்களின் அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திர நிலையமாக மாறும் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள்... Reviewed by Author on December 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.