ராணுவச் செலவுகளுக்காக ரூ.6 லட்சம் கோடி ஒதுக்கிய ஜப்பான் அரசு: ஏன் தெரியுமா?
ஜப்பான் நாட்டு வரலாற்றில் இல்லாத அளவில் தற்போது முதன் முதலாக அந்நாட்டு ராணுவச் செலவுகளுக்காக ரூ.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக ஜப்பான் அண்டை நாடுகளான சீனா மற்றும் வட கொரியா நாடுகள் ஜப்பான் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.
இதுமட்டுமில்லாமல், கிழக்கு சீனா கடற்கரைக்கு அருகில் சீனா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளும் அடிக்கடி ரோந்தில் ஈடுப்பட்டு வருவதால் ஜப்பான் நாட்டிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
எனவே, சர்ச்சைக்குரிய பகுதிகளில் அதிகளவிலான ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, வழக்கத்திற்காக மாறாக அதிக எண்ணிக்கையில் ராணுவ விமானங்கள், ரோந்து கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், ஜப்பான் நாட்டின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவச் செலவுகளுக்காக 44 பில்லியன் டொலர்(653928,00,00,000 இலங்கை ரூபாய்) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவச் செலவுகளுக்காக ரூ.6 லட்சம் கோடி ஒதுக்கிய ஜப்பான் அரசு: ஏன் தெரியுமா?
Reviewed by Author
on
December 22, 2016
Rating:
Reviewed by Author
on
December 22, 2016
Rating:


No comments:
Post a Comment