அதிதீவிர புயலாக மாறியுள்ள "வர்தா"....! இந்திய எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது “VARDAH” தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது நெல்லூரில் இருந்து 710 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், நாளை மறு தினம் சென்னை - ஓங்கோல் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனிடையே, "வர்தா" புயல் தாக்கத்தின் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிதீவிர புயலாக மாறியுள்ள "வர்தா"....! இந்திய எச்சரிக்கை
Reviewed by Author
on
December 11, 2016
Rating:

No comments:
Post a Comment