அண்மைய செய்திகள்

recent
-

கேள்வி கோரலுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


வவுனியா செட்டிகுளம் பிரதேச சந்தை தொகுதிக்கான கேள்வி கோரல் மாவட்ட ரீதியில் இடம்பெறக்கூடாது என கோரி ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பகுதியில் பிரதேச சபையினால் நெல்சிப் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட சந்தை கட்டடத்தொகுதிக்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டாம் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் சந்தை கட்டடத்தொகுதி வளாகத்தில் அப்பகுதி மக்களினால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கேள்வி கோரலை இரத்துச்செய், செட்டிகுளம் பிரதேச அதிகாரிகளே பிரதேச மக்களின் பொருளாதாரத்தை உறுதி செய் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட மாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலளார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி யளித்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச சபையின் செயலா ளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி கோரலுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.