அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித இரத்தம் விநியோகம்....
அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித இரத்தம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளில்லாத குறித்த விமானங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.
எதிரி நாடுகளின் நிலைகளை உளவு பார்க்கவும், தீவிரவாதிகளை குண்டு வீசி அழிக்கவும் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லாமல் தானாக இயங்கும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதை தொடர்ந்து நீண்ட தூரங்களுக்கு பீட்சா மற்றும் பொருட்களை கொண்டு செல்ல குறித்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை, தற்போது மனிதர்களின் உயிர்காக்கும் இரத்தத்தை சுமந்து சென்று பத்திரமாக சேர்க்கும் பணியை ஆளில்லா விமானங்கள் செய்து வருகின்றன.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு இன்றி மிக விரைவாக ரத்தம் கிடைத்து மனித உயிர்கள் காக்கப்படுகின்றன. இதற்கான சோதனை ஓட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது.
அதில், ஜான்ஸ் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டனர். இக்குழுவினர் 6 யூனிட் ரத்த சிவப்பணுக்கள், 6 யூனிட் பிளேட் வெட்ஸ் எனப்படும் இரத்த வட்டுகள் உள்ளிட்ட ரத்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆளில்லா விமானம் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இவை கெட்டுப் போகாமல் இருக்க ஆளில்லா விமானத்தில் குளிர் சாதன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறன.
குறித்த விமானங்கள் 13 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவை தரையில் இருந்து 328 அடி உயரத்தில் பறந்து சென்றன. இவை 26.5 நிமிடங்களில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித இரத்தம் விநியோகம்....
Reviewed by Author
on
December 10, 2016
Rating:
Reviewed by Author
on
December 10, 2016
Rating:


No comments:
Post a Comment