அண்மைய செய்திகள்

recent
-

கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரையும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நேரில் சென்று பார்வை-

கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று வெள்ளிக்கிழமை(20) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கனேஸ்வரன் வேலாயுதமும் சென்றிருந்தார்.

இதன் போது கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளையும் சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

-இதன் போது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,கண்டி உற்பட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பல வருடங்களாக விசாரனைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது தங்களை விசாரனைக்காக அழைத்துச் செல்லப்படும் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் சிங்களவர்களாக உள்ளனர்.எனவே தமக்கு நீதியான தீர்ப்பு கிடைப்பதில்லை.

எனவே தங்களை தமிழ் நீதிபதிகள் விசாரனை செய்ய வேண்டும்.

அல்லது தமிழ் நீதிபதிகள் உள்ள நீதிமன்றங்களுக்கு தமது வளக்குகளை மாற்றி விசாரனைக்கு உற்படுத்த வேண்டும் என கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் வாதிகள் யாரும் இது வரை தங்களை வந்து பார்வையிடாத நிலையில் தாம் உள ரீதியாக பாதீக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் ஆகியோர் இன்றைய தினம்(20) வந்து தங்களை பார்வையிட்டு தமது பிரச்சினைகளை கேட்டரிந்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

-எனவே தமது விடுதலை குறித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரூம் கூட்டாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரையும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நேரில் சென்று பார்வை- Reviewed by NEWMANNAR on January 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.