2022 ஆம் ஆண்டு என்ன நடக்கவிருக்கிறது தெரியுமா? ஜெருசலேம் மத போதகரின் தீர்க்கதரிசனம்!
2022 ஆம் ஆண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் அதிசயம் நிகழ்ந்த பின்னர் ஏசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார் என ஜெருசலேம் மத போதகர் ஒருவர் முன்னறிவித்துள்ளார்.
ஜெருசலேமில் மத போதகராக இருந்து வருபவர் யூசெஃப் பெர்ஜெர். இவர் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து தீர்க்கதரிசனம் செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் என்று தெரிவித்துள்ள பெர்ஜெர், அந்த காட்சிகளை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றோடொன்று மோதவிருக்கும் அந்த நட்சத்திர கூட்டத்தின் பெயர் KIC 9832227 என தெரிவித்துள்ள அவர், அதன் பின்னர் நிகழப்போவதாக கூறும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இஸ்ரேல் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
நட்சத்திர கூட்டத்தின் மோதலுக்கு பின்னர் ஏற்படும் பெரும் அமைதியை அடுத்து ஏசு கிறிஸ்து தோன்றுவார் என பெர்ஜெர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறும் என்பதை யூதர்களின் புனித நூலான Torah ல் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி நட்சத்திரங்கள் ஒட்டுமொத்தமாக எத்தனை உள்ளது எனவும், அவைகளின் வண்ணங்கள் என்ன என்பதும் Torah நூலில் மிகவும் விளக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி Zohar 24:17 ல் 2022 ஆம் ஆண்டு என்ன நடைபெறும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் போதகர் பெர்ஜெர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு என்ன நடக்கவிருக்கிறது தெரியுமா? ஜெருசலேம் மத போதகரின் தீர்க்கதரிசனம்!
Reviewed by Author
on
January 18, 2017
Rating:

No comments:
Post a Comment