அண்மைய செய்திகள்

recent
-

நபரின் வாய் வழியாக வந்த 6 அடி நீள நாடாப்புழு: அதிர்ச்சியில் மருத்துவர்கள்...


இந்தியாவில் 48 வயது நபர் ஒருவரின் சிறுகுடலில் இருந்த 6 அடி நீளம் கொண்ட நாடப்புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.

48 வயதான தீபன் என்ற நபர் கடந்த 2 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதன்பின்னர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்ததில், சிறுகுடலில் 6 அடி நீளம் கொண்ட புழு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள PVS Memorial மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சையில், இவரது வாயின் வழியாக இந்த நாடாப்புழு வெளியேற்றப்பட்டது. மேலும், அவருக்கு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் Cyriac Phillips கூறியதாவது, சமைக்கப்படாத பன்றி இறைச்சியை சாப்பிடும்போது, அதனுள் இருக்கும் ஒட்டுண்ணிகள் வயிற்றுக்குள் சென்று, தங்களை வளர்த்துக்கொள்கின்றனர்.

பன்றி இறைச்சி மட்டுமல்லாமல் ஆடு போன்ற இறைச்சிகளை சாப்பிடும்போதும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இதுபோன்று அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறோம்.

ஆனால், 6 அடி என்பது அதிகம் என்றும் முதல் முறையாக இந்த அளவு கொண்ட நாடாப்புளுவை பார்த்துள்ளோம் என ஆச்சரியத்தோடு கூறியுள்ளார்.

நபரின் வாய் வழியாக வந்த 6 அடி நீள நாடாப்புழு: அதிர்ச்சியில் மருத்துவர்கள்... Reviewed by Author on January 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.