அண்மைய செய்திகள்

recent
-

மழை வேண்டி இரணைமடுவில் குடைபிடித்து விசேட வழிபாடு


தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றது.

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.


இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சிவமோகன், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனமும் ,விவசாயப்பெருமக்களும் இனணந்து கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 97 பானைகளில் பொங்கி சிறப்பு வழிபாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



மழை வேண்டி இரணைமடுவில் குடைபிடித்து விசேட வழிபாடு Reviewed by Author on January 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.