மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற அரச திணைக்களங்களுக்கிடையிலான மாபெரும் விளையாட்டு விழா-(படங்கள்)
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையின் ஏற்பாட்டில் கடந்த 12 ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான அரச திணைக்களங்களுக்கிடையிலான மாபெரும் விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த விளையாட்டு விழாவின் போது 24 அரச திணைக்களங்கள் கலந்து கொண்டிருந்தது.
குறித்த விளையாட்டு விழாவில் கிரிக்கெட் ,உதைப்பந்தாட்டம்,கரப்பந்தாட் டம்,போன்றவை இடம் பெற்றது.
-கடந்த 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான 4 தினங்கள் இடம் பெற்ற போட்டிகளின் இறுதிச் சுற்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.
-இதன் போது கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மடு பிரதேசச் செயலகம் 1 ஆம் இடத்தினையும்,முசலி பிரதேசச் செயலகம் 2 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றிக்கேடையத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
-கரப்பந்தாட்டம்(ஓவர்) போட்டியில் மன்னார் அஞ்சல் திணைக்களம் 1 ஆம் இடத்திணையும்,முசலி பிரதேசச் செயலகம் 2 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றிக்கேடையத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
-கரப்பந்தாட்டம்(செட்டப்) போட்டியில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை 1 ஆம் இடத்தினையும், மன்னார் நீர்ப்பாசனத்திணைக்களம் 2 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றிக்கேடையத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
-உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் வலயக்கல்வித்திணைக்களம் 1 ஆம் இடத்தினையும்,மன்னார் கமநலசேவைகள் திணைக்களம் 2 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றிக்கேடையத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
-வெற்றி பெற்ற அரச திணைக்களங்களைச் சேர்ந்த விளையாட்டுக்கழகங்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் பெற்றது.
-இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வடமாகாண முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அரச திணைக்களங்களைச் சேர்ந்த விளையாட்டுக்கழகங்களுக்கு வெற்றிக்கேடையங்களை வழங்கி வைத்தனர்.
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த விளையாட்டு விழாவின் போது மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள பணியாளர்களுக்கிடையில் ஓர் அறிமுகம் , புறிந்துனர்வு,ஒற்றுமை போன்றவற்றை ஏற்படுத்தும் வகையிலே குறித்த விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
(15-1-2017)

Reviewed by Author
on
January 16, 2017
Rating:

No comments:
Post a Comment