தமிழர்களை பலம் பொருந்தியவர்களாக மாற்ற பிரதமர் எடுத்துள்ள புதுத்திட்டம்..!
தமிழ் மக்களை சக்தி மிக்கவர்களாக மாற்றுவதே எமது திட்டம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசியலைப்போன்றே இப்போது சமூக கலாச்சாரங்களின் வளர்ச்சியினை நாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் பாடசாலைகளை குறிப்பிட்டு அவற்றில் உயர்தர விஞ்ஞான பாட கற்கை நெறியை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அரசு அமைச்சருடன் கல்வி அமைச்சருடன் இணைந்து அதன் பிரதிபலனை பற்றி கலந்துரையாட வேண்டும்.
அப்போது பிரதிலன் கிடைக்காத சந்தர்ப்பத்தில் கற்கை நெறி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அதிபர்களும் பொறுப்பேற்று பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
இன்னும் ஒரு வருடத்தில் 13ஆம் தரம் வரை கல்வி கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படும்.
இரண்டு வருடங்களில் மாணவர்களுக்கு கைக்கணினி (டாப்லொட்) வழங்கப்படும்.
நாம் இருப்பது நாட்டை அபிவிருத்தி செய்யவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், பணம் கொடுக்கவும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவுமே.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கு அறிவை பெற்றுக்கொடுத்து இன்னும் அவர்களை பலம் பொருந்தியவர்களாக மாற்றுவதே திட்டம் எனவும் பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களை பலம் பொருந்தியவர்களாக மாற்ற பிரதமர் எடுத்துள்ள புதுத்திட்டம்..!
Reviewed by Author
on
January 16, 2017
Rating:

No comments:
Post a Comment