அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள், 100 கற்குகைகள், ஓலைச்சுவடிகள்..! வியப்பில் மக்கள்


வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபிகள், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே குறித்த தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தாதுப்பொருட்கள் அநுராதபுரம் யுகத்திற்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்புடைய பண்டைக்கால கட்டடங்களும் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மஹா கச்சக்கொடி பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த தாதுப்பொருட்களையும், கட்டடத்தையும், ஓலைச்சுவடியையும் பார்த்து மக்கள் வியப்பில் ஆழிந்துள்ளனர்.

மேலும், கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை வரலாற்று ரீதியான அநுராதபுர காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதை யுனெஸ்கோ சபை உலக மரபுரிமை நகரமாகவும் தெரிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மொனராகலை கியுலேயாய வெட்டமுகல பிரதேசத்தில் நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஆரம்ப காலத்தில் கல்லில் வரையப்பட்ட புராதன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.

அதில் 200 முதல் 300 ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த கற்பாறை 75 மீற்றர் நீளமும் 20 மீற்றர் உயரமும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள், 100 கற்குகைகள், ஓலைச்சுவடிகள்..! வியப்பில் மக்கள் Reviewed by Author on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.