அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சருக்கு சிங்களத்தில் பதிலடி கொடுத்த வடக்கு முதல்வர்,,,


வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதே பிரச்சினையானது எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான புதிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

முதலமைச்சர் அங்கு சிங்களத்தில் உரையாற்றினார்.

வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் கவனிக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த கட்டிடத்தை பார்த்தால் சிங்கள மக்களை நாங்கள் புறக்கணிக்கின்றோமா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

80 வருடங்களுக்கு மேல் வடக்கில் வாழும் சிங்கள மக்கள் குறித்து எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் எமது மக்கள்.

வடக்கில் எமது மக்களுக்கு காணிகள் தேவையாக இருக்கும் போது வெளியிடங்களில் இருந்து அழைத்து வந்து குடியேற்றுவதே எமக்குள்ள பிரச்சினையாகும். இதுதான் எங்களுடைய பிரச்சினை. சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எங்களுடன் சிங்கவர்கள் இருந்தனர். அவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

1950 முதல் 1956 ஆம் ஆண்டு வரை வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்க தெற்கில் இருந்து அதிகளவான ஆசிரியர்கள் வந்தனர். அவர்கள் மூலமாக இங்குள்ளவர்கள் சிங்களம் கற்றுக்கொண்டனர்.

தெற்கில் தமிழ் படித்தார்கள். இறுதியில் 1956 ஆம் ஆண்டு தமிழுக்கு இடமளிக்காது முழு இலங்கைக்கும் சிங்களம் மாத்திரமே பிரதான மொழி என்ற சட்டத்தை கொண்டு வந்தனர். இதன் காரணமாகவே இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்பட்டன.

இதனால், எங்கு பிரச்சினை ஆரம்பிக்கின்றது என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து யார் என்ன கூறினாலும் பயனில்லை.

அண்மையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர என்னை இங்கிருந்து விரட்ட வேண்டும் என கூறியுள்ளார். அவர் எனது நண்பர்.

என்னை விரட்டி விட்டால் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக பேசும் ஒருவர் மீண்டும் நியமிக்கப்படுவார்.

அவரும் நான் கூறுவதையே கூறுவார். அங்காங்கே கூடி விளையாட்டு மண்டபங்களில் சத்தமிட்டு நாங்கள் இலங்கையர்கள் என்று கூறுவதில் பயனில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு நாம் விரும்பியவாறு இருக்க முடியும். வடக்கில் உள்ளவர்கள் தெற்கிற்கு போகலாம். தெற்கில் உள்ளவர்கள் வடக்கிற்கு வர முடியும்.

இதற்காகவே நாங்கள் சமஷ்டியை கேட்கின்றோம். எனினும் சமஷ்டி வழங்கினால் நாடு பிரியும் என்ற தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

உலகில் தற்போது சகல இடங்களிலும் சமஷ்டி முறை நடைமுறையில் உள்ளது. சமஷ்டி தீர்வின் மூலமே நாட்டை இணைக்க முடியும்.

எனினும் தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் நாடு பிரிந்து விடும் எனக்கூறுகி்ன்றனர்.

நாங்கள் எதற்காக இதனை கூறுகின்றோம் என்று அனைத்தையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருக்கு சிங்களத்தில் பதிலடி கொடுத்த வடக்கு முதல்வர்,,, Reviewed by Author on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.