பிரித்தானியாவுக்கு தொடரும் அச்சுறுத்தல்: அடுத்த 12 நாட்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை!
பிரித்தானியாவில் டோரிஸ் புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டெழும் முன்னர் அடுத்த எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
பிரித்தானியாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஞாயிறு தொடக்கம் அடுத்த மாதம் மத்திய பகுதி வரை கடுமையான பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோரிஸ் புயலின் தாக்கத்தில் இருந்து பிரித்தானிய மக்கள் முழுமையாக விடுபட்டு எழும் முன்னர் வானிலை ஆய்வு மையம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடபகுதியில் இருந்து வீசும் காற்று கடுமையான பனிப்பொழிவிற்கு வழிவகுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கள் அன்று மழை இருக்கும் எனவும் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு இருக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி எம்மா சால்டர் தெரிவித்துள்ளார்.
பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் நெருக்கடியை தரலாம் இனி வரும் நாட்களில். மட்டுமின்றி செவ்வாய் காலை முதல் உறை பனிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே பனிப்பொழிவு துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. டோரிஸ் புயலால் 400 மில்லியன் பவுண்டு வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவுக்கு தொடரும் அச்சுறுத்தல்: அடுத்த 12 நாட்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை!
Reviewed by Author
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment