குடிநீரிலுள்ள உயிர்கொல்லியான ஆர்சனிக்கை வடிகட்டும் சாதனம் கண்டுபிடிப்பு!
ஆசனிக் எனும் இராசனப் பொருளானது உயிரைக் கொல்லும் அளவிற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தாகும்.
இவ் இரசாயனப் பதார்த்தம் நீரில் கலக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இப்பிரச்சினையால் உலகளவில் 70 நாடுகளில் உள்ள 137 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில்கொண்டு இவர்களுக்கு தீர்வு வழங்கும் முகமாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியானது நீரில் உள்ள ஆர்சனிக்கை வடிகட்டும் ஆற்றல் கொண்டதாக விளங்குகின்றது.
குறித்த ஆர்சனிக் இரசாயனப் பொருள் ஆனது வேகம் குறைவாகவே நீருடன் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடுவதால் இதன் தீமையை உணர நீண்ட காலம் எடுக்கும் எனவும் பல மில்லியன் மக்கள் மாற்று நீர் இன்றி அவதிப்படுவதாகவும் இக் கருவியைக் கண்டுபிடித்த University of Technology Sydney (UTS) குழு தெரிவித்துள்ளது.
குடிநீரிலுள்ள உயிர்கொல்லியான ஆர்சனிக்கை வடிகட்டும் சாதனம் கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment