அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா...500 போர்க்கப்பல்கள் தயார் நிலை?
அமெரிக்காவுடனான போருக்கு 500க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை தயார் செய்யும் நிலையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் சீனா மீது போர் தொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் சீனா அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு தேவையான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை விரைவில் காணமுடியும் என்றும் அதில் விமான தாங்கி கப்பல்கள், நீர்முழ்கிகப்பல்கள் மற்றும் போருக்கு தேவையான அணுசக்தி கப்பல்கள் போன்றவைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் சீனாவில் வலுவான பொருளாதாரம் உள்ளது, அதனால் பணவிவகாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதால் ஒரு திறன் மிக்க ஆயுதப்படையை தயார் செய்வதில் சீனா உறுதியாக உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் புது வகையான இராணுவப்படைகளை சீனா தயாராக்கி உள்ளதாம்.
அதுமட்டுமின்றி வரும் 2050 ஆண்டிற்குள் பசிபிக் பகுதிகள் முழுவதையும் சீனா தன் காட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முழுநடவடிக்கைகளை எடுத்து வருவகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த விவாகரத்தில் டிரம்பிற்கு ஒரு விதம் அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா...500 போர்க்கப்பல்கள் தயார் நிலை?
Reviewed by Author
on
February 08, 2017
Rating:
Reviewed by Author
on
February 08, 2017
Rating:


No comments:
Post a Comment