அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலை நாட்ட விகாராதிபதிகளுடன் விசேட கலந்துரையாடல் -(படம்)


இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலை நாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் வவுனியாவில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்  வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்  கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் , வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-இதன் போது கலந்து கொண்ட தேரர்கள் தற்போது நாட்டில் நிலவும் நல்லிணக்கம் சில இனவாத சிந்தனையுடன் செயல்படுபவர்களால் சீர்குலைந்து காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையை நாம் வடக்கு மக்களிடையோ சிறுபான்மை மக்களிடையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த விடக்கூடாது.
இலங்கை நாட்டில் உள்ள சில தேரர்கள் இனவாதப் போக்கினை கொண்டு செயல்படுகின்றனர்.

 இதற்கு சில அரசியல்வாதிகளும் சேர்ந்து நாட்டில் குழப்பத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

 உண்மையான பௌத்த தர்மத்தனை பின்பற்றாத இவர்கள் பௌத்த மதத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

 எந்த ஒரு மதமும் இனவாதத்தை தூண்டவில்லை.

 மனிதர்களிடையே பிரிவினை ஏற்படுத்துமாறு கூறவில்லை அனால் இன்று அவைகள் நடைபெறுகின்றது.

அதுமட்டுமல்லாது கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் ஒரு சிறந்த அமைச்சர்.
இனபேதம்,மதபேதம்,மொழிபேதம் எவையும் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுகிறார்.
 சிங்கள மக்களின்  வாழ்வாதாரத்தினையும் கொண்டு செயட்படுகின்றார்.

 ஆனால் இந்த இனவாதிகள் இவரை அளிக்க நினைக்கின்றார்கள். அதற்க்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
 இனவாதத்தினை தூண்டுவோர்களுக்கு எதிராக போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோம்' என தேரர்கள் தெரிவித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-


வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலை நாட்ட விகாராதிபதிகளுடன் விசேட கலந்துரையாடல் -(படம்) Reviewed by Author on February 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.