72 பந்துகளில் 300 ஓட்டங்கள்! டி20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்,,,,
இந்திய கிரிக்கெட் வீரர் டி20 போட்டியில் முச்சதம் அடித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 21 வயதான துடுப்பாட்டகாரர் மோகித் அலாவத் என வீரரே இச்சாதனையை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் மோகித், டெல்லியில் லலிதா பார்க் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் மாவி லெவன் அணிக்காக களமிறங்கி, பிரண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக இச்சாதனையை படைத்துள்ளார்.
தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய மோகித் 72 பந்துகளில் 14 பவுண்டரி, 39 சிக்சர் அடித்து ஆட்டமிழக்காமல் 300 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளிலும் சிக்சர் விளாசி இந்த மைல்கல்லை அவர் எட்டினார், அவரது அணி 20 ஓவர்களில் 416 ஓட்டங்களை குவித்தது.
டி20 போட்டியொன்றில் இதுவரை உலகில் எங்குமே முச்சத சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
72 பந்துகளில் 300 ஓட்டங்கள்! டி20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்,,,,
Reviewed by Author
on
February 08, 2017
Rating:
Reviewed by Author
on
February 08, 2017
Rating:


No comments:
Post a Comment