பசி என்றால் என்ன தெரியுமா? டொனால்ட் ட்ரம்ப்பிடம் காரசாரமாக கேள்வி கேட்ட 7வயது சிறுமி
நீங்கள் 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?, சிரியாவில் உள்ள குழந்தைகளும் உங்களுக்கு தீவிரவாதி போல தெரிகின்றனரா? என சிரியாவைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தவாரம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிர்வாக ஆணைப்பத்திரத்தில் கையொப்பம் இட்டிருந்தார்.
இந்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க முன்னாள் முன்னாள் ஒபாமா முதல் பல நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
தொடர்ந்தும் உள்நாட்டுப் போரால் மோசமாக சிதைவடைந்தது அந்நாடு.
போரின் இடையே சிக்கி பலர் இறந்தனர். போரின் கோரத்தாண்டவத்தில் இருந்து தப்பிய 7 வயது சிறுமி பானா அலாபத், தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அலாபத், “நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?
சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? அவர்களைப் பற்றி நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்களது நடவடிக்கை மிகவும் மோசமானது.
தடையை நீக்கவில்லை என்றால், எங்களது நாட்டையாவது அமைதியாக இருக்க விடுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதியிடம் காரசாரமான கேள்வியைக் கேட்ட இந்தச் சிறுமியின் காணொளியினை சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பகிர்ந்துவருதுடன், டொனால்ட் ட்ரம்ப்பின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கருத்துவெளியிட்டுவருகின்றனர்.
பசி என்றால் என்ன தெரியுமா? டொனால்ட் ட்ரம்ப்பிடம் காரசாரமாக கேள்வி கேட்ட 7வயது சிறுமி
Reviewed by Author
on
February 03, 2017
Rating:

No comments:
Post a Comment