யாழில் 8 தமிழர்கள் படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் கோரிக்கை...
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரி தாக்கல் செய்திருந்த மீள் திருத்த மனுவை விசாரிப்பதற்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக மீள்திருத்தக்கோரி தாக்கல் செய்திருந்த மீள்திருத்த மனு, உயர்நீதிமன்ற நீதவான் புவனெக அலுவிஹாரே உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மீள்திருத்த மனு மீதான விசாரணைகளுக்காக எதிர்வரும ஜூலை மாதம் 5, 6, 7, 12, 13, 14ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு எட்டு தமிழர்களை படுகொலை செய்து மேலும் ஒரு நபருக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவிற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 8 தமிழர்கள் படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் கோரிக்கை...
Reviewed by Author
on
February 01, 2017
Rating:

No comments:
Post a Comment