மன்னாரில் நாளை இடம் பெறவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு.(படம்)
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு நாளை சனிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெறவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் சற்று முன்னர் (வெள்ளி மாலை) தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
ஆகவே இவற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் வட கிழக்கில் சுதந்திர தினத்தன்று அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது..
மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நாளான நாளை சனிக்கிழமை(4) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கை விலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டம் நடாத்தப்படும் என பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்திருந்தது.
எனினும் நாளை சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற உள்ளதால் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர சபை மண்டபம் வரை இடம் பெறும் சுதந்திர தின நிகழ்விற்கு ஏதாவது பாதீப்பை ஏற்படுத்துபவராகவோ அல்லது ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் செய்றபட்டை செய்யாது இருக்கும் படி கட்டளை பிறப்பிக்கின்றேன் என மன்னார் நீதிமன்றம் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு பொலிஸ் ஊடாக அனுப்பியுள்ள தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்-
(2-2-2017)
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
ஆகவே இவற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் வட கிழக்கில் சுதந்திர தினத்தன்று அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது..
மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நாளான நாளை சனிக்கிழமை(4) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கை விலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டம் நடாத்தப்படும் என பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்திருந்தது.

மன்னார் நிருபர்-
(2-2-2017)
மன்னாரில் நாளை இடம் பெறவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 04, 2017
Rating:

No comments:
Post a Comment