மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்மடு கிராம வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு-(படம்)
மடு பிரதேசச் செயலர் பிரிவுக்குற்பட்ட கல்மடு கிராமத்தில் உள்ள மக்களின் போக்கு வரத்து வசதிகளை கருத்தில் கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பதற்கான பணிகள் இன்று(3) வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
மடு பிரதேசச் செயலர் பிரிவுக்குற்பட்ட கல்மடு கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கும் கல்மடு 2 ஆம் மற்றும் 3 ஆம் யுனிட்களுக்கான 2 ஆம் யுனிட் பிரதான வீதி தார் வீதியாக புனரமைக்கும் வகையில் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(3-2-2017)
மடு பிரதேசச் செயலர் பிரிவுக்குற்பட்ட கல்மடு கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கும் கல்மடு 2 ஆம் மற்றும் 3 ஆம் யுனிட்களுக்கான 2 ஆம் யுனிட் பிரதான வீதி தார் வீதியாக புனரமைக்கும் வகையில் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(3-2-2017)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்மடு கிராம வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 04, 2017
Rating:

No comments:
Post a Comment