அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழ தாயகத்தின் பிரபல புரட்சி பாடகர் எஸ்.ஜி.சாந்தன் இயற்கை எய்தினார் -Photos


 தமிழீழ  தாயகத்தின் பிரபல  புரட்சி பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்ப
ட்டுள்ளது.

பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.

ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியசீலன் தெரிவித்திருந்தார்.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.





அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
--------------------------
தமிழீழ வரலாற்றில் தனது குரலை பெரும் ஆயுதமாக்கி மக்களிடையே எமது போராட்ட கருத்துக்களை கொண்டு சேர்ப்பதிலும் மாவீர காவியங்களை வரலாறாக்குவதிலும் முன்னின்ற பாடகர் சாந்தன் அவர்கள் உடல்நிலை சீரில்லாது நீண்ட நாட்களாக இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசரபிரிவில் சாவடைந்துள்ளத்துள்ளார்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தன் அவர்களின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.
எண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.
போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.
கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரின் இழப்பு ஈடிணையற்ற இழப்பாகும்.

தமிழீழ தாயகத்தின் பிரபல புரட்சி பாடகர் எஸ்.ஜி.சாந்தன் இயற்கை எய்தினார் -Photos Reviewed by NEWMANNAR on February 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.