அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று வியாழக்கிழமை(9) காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த மக்கள் பிரதமரை பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.
இதன் போது பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் புதுக்குடியிருப்பு மக்களின் 49 சொந்த வீடுகள் உள்ளடங்கியிருப்பது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
-மேலும் தனியாருடைய காணிகளில் இராணுவம் இருப்பது தொடர்பில் அதற்கான சான்றுகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.
அருகில் உள்ள அரச காணிகளுக்கு இராணுவத்தை நகர்த்தி அம்மக்களின் காணிகளை விடுவிக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதிப்பாதுகாப்பு அமைச்சரையும், இராணுவ அதிகாரிகளையும் , அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை உடனடியாக ஆராய்ந்தார்.
இதன் அடிப்படையில் இராணுவ வசமுள்ள குறித்த 49 வீடுகளையும், காணிகளையும் உரிமையாளர்களிடம் உடன் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதீக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார்.

இதன் போது பாதீக்கப்பட்ட குறித்த பிரதேச மக்கள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது சொந்த வீடுகள் விடுவிக்கப்படாததால் தாம் நிரந்தர வாழ்விடமின்றி பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருவதாகவும் 7 வருடங்களாக தாம் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லையெனவும் குறிப்பிட்ட அவர்கள் இன்று (90 இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று பாரிய நம்பிக்கையுடன் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பிரதமர் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து உரிய காணிகளை மக்களிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாhளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. Reviewed by NEWMANNAR on February 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.