இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்களினால் வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிப்பு -(படம்)
வவுனியா மாவட்டத்தில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான தரிப்பிடத்தில் இருந்து தமது சேவையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் தமது சக ஊழியர்கள் தாக்கப்படுவதனையும் கண்டித்து இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நேற்று (2) வியாழக்கிழமை காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை(3) இரண்டாவது நாளாகவும் தெடர்கின்றது.
இதன் போது இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் கொடும்பாவியினை இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் மன்னார் அரச தரிப்பிடத்தில் வைத்து எறித்துள்ளனர்.
தொடர்ச்சியாக வடமாகாணத்தில் உள்ள இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் போது வடமாகாண அமைச்சர் பணிப்பகிஸ்கரிப்பு குறித்தும் தமக்கு எதிராகவும் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள கருத்துக்களை கண்டிக்கும் வகையிலே தாம் அமைச்சரின் கொடும்பாவியை எறித்ததாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட மன்னார் சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் எறிந்து கொண்டிருந்த கொடும்பாவியை நீர் ஊற்றி அனைத்தனர்.
கொடும்பாவி எறியூட்டப்பட்டமை தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று (3) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் அரச போக்குவரத்துச் சேவைகள் முற்றாக செயழல் இழந்துள்ளது.
இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

Reviewed by NEWMANNAR
on
February 03, 2017
Rating:
No comments:
Post a Comment