எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் இப்படி தான் அறிவிப்பார்கள்: வெளியான ரகசியம்...
பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி மரணமடைந்தால் London Bridge is down என அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் மகாராணிக்கு தற்போது 90 வயது ஆகிறது, அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
பிற்காலத்தில் அவர் உயிரிழந்தவுடன் வெளியுலகிற்கு அறிவிக்கும் முறைகள் தற்போது தெரியவந்துள்ளது.
அதன்ப்படி, அவர் உயிரிழந்தால் London Bridge is down என்ற வார்த்தை கூறப்படும். இது முதலில் பிரித்தானியாவின் பிரதமரிடம் தான் கூறப்படும்.
இந்த வார்த்தையை கூறினால் மகாராணி இறந்துவிட்டார் எனவும் அவர் இறுதிசடங்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அர்த்தமாகும்.
மேலும், மகாராணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பின்புறம் துக்கத்தை குறிக்கும் கருப்பு நிறமாக மாற்றப்படும்.
பின்னர், மகாராணி வாழ்ந்து வரும் Buckingham அரண்மனை வாயிலில் துக்கத்தை அனுசரிக்கும் உடையுடன் ஒருவர் தொடர்வண்டியை எடுத்து கொண்டு வருவார் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் மன்னர் நான்காம் ஜார்ஜ் இறந்து நான்கு மணி நேரம் கழித்தே வெளியுலகுக்கு அறிவித்தார்கள்.
மகாராணி விடயத்தில் இன்னும் அதிக நேரம் கழித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் இப்படி தான் அறிவிப்பார்கள்: வெளியான ரகசியம்...
Reviewed by Author
on
March 17, 2017
Rating:

No comments:
Post a Comment