டெங்கு தாக்கம் கிழக்கில் தீவிரம்....
கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கும் 3ஆயிரத்து 821 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2ஆயிரத்து 088 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100 பேர் பாதிப்புக்குளானதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். முஹம்மட் நஸீரின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக கிழக்கு மாகாண பிரதம செய லாளர் தலைமையில் டெங்கு நோய் பரவது தொடர்பாக சுகாதார, உள்@ராட்சி மன்ற திணைக்கள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கமைய, கிழக்கு மாகாண திருகோணமலை பிரதேசத்தில் அதிகம் பரவும் டெங்கு நோயை தடுப்பது தொடர்பாகவும், அதனை தடுப்பதற்கு மேற்கொள்ளவுள்ள விசேட திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்ப ட்டது.
குறிப்பாக திருகோணமலை பிரதேசத் தின் உள்@ராட்சி மன்ற திணைக்களங்களும், சுகாதார திணைக்களங்களும் விசேட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதும் இன்னும் அதன் வேகத்தை அதிகரித்து டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதுவரை கிண்ணியா பிரதேசத்தில் 12 பேர் மரணித்ததுடன் குச்சவெளியில் ஒரு வரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் மரணித்துள்ளார்கள்.
குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் அதிகளவு இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினருடனும், உள்@ராட்சி மன்ற ஊழியர்களுடனும் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்நிலையில் கிண்ணியா பிரதேச பாடசாலை மாணவர்களின் வரவு அண்மைக் காலமாக 40 சதவீதத்துக்கும் குறைவாக காணப்பட்டமையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு தாக்கம் கிழக்கில் தீவிரம்....
Reviewed by Author
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment