முகநூலில் அவதூறு பொலிஸார் நடவடிக்கை....
இளைஞர் ஒருவரை அவதூறாக முகநூல் கணக்கில் பதிவேற்றிய நபர் ஒருவரை கடும் எச்சரிக்கை செய்து அக்கணக்கையும் அழிப்பித்து அனுப்பிய சம்பவம் நெல்லியடிப் பொலிஸில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி நகரில் முச்சக்கரவண்டி செலுத்தும் இளைஞர் ஒருவரின் படத்தினைப் போட்டு தன்னைப் பற்றி எழுதப்பட்டிருந்ததாக தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நெல்லியடி பொலிஸில் 20.03.2017 அன்று முறைப் பாட்டை பதிவு செய்தார்.
இது தொடர்பில் விசாரணை செய்த நெல்லியடிப் பொலிஸார் கணக்கு வைத்திருப்பவரை கண்டு பிடித்து கடும் எச்சரிக்கை செய்ததுடன் கணக்கையும் அழித்துள்ளார்.
முகநூலில் அவதூறு பொலிஸார் நடவடிக்கை....
Reviewed by Author
on
March 22, 2017
Rating:

No comments:
Post a Comment