வடக்கு மாகாண அரசில் 1,451 வெற்றிடங்கள்!
வடமாகாண சபையின் கீழ் தற்போது ஆயிரத்து 451 வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாகவும் அவை தொடர்பான விபரங்கள் வடமாகாண சபை அவைத்தலைவரால் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் கீழ் உள்ள வேலை வாய்ப்பு வெற்றிடங்களை கடந்த 15ஆம் திகதி வட மாகாண சபை அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தை வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன் போது வடக்கு மாகாண சபையின் கீழ் ஆயிரத்து 451 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அத்தரவுகளை கடந்த 18ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவைத்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவ் வெற்றிடங்களின் நியமனங்கள் தொடர்பிலும் வேலையற்றபட்டதாரிகளுக்கு நியமனம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் காலை 9.30 மணி அளவில் யாழ் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் தொடர் போராட்டத்தின் மிக முக்கியமான தீர்மானம் எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதால் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் அவசியம் கலந்து கொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண அரசில் 1,451 வெற்றிடங்கள்!
 Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment