தாய்க்கு எச்.ஐ.வி : மகளை பாடசாலையில் இணைத்துக்கொள்ள பாடசாலை நிர்வாகம் மறுப்பு : இலங்கையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்
குளியாபிட்டிய பகுதில் தாயிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறி, சிறுவனை பாடசாலையில் இணைத்துக்கொள்ள மறுத்த சம்பவம் கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், அதே போன்றதொரு அதிர்ச்சி சம்பவம் மீண்டும் கனேமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.
கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு எச்.ஐ.வி. நோய் இருப்பதால் அவருடைய மகளை பாடசாலையில் இணைத்துக்கொள்ள பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கனேமுல்ல குடாபொல்லத்த பாடசாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த மாணவியை பாடசாலைக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஆராய்வதற்காக அந்த மாணவியின் தாயார் ஊடகவியலாளர் குழுவொன்றை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற அவரால் அதிபரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ள இயலவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆசிரியர்கள், அதிபர் பாடசாலையில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு எச்.ஐ.வி. நோய் இருப்பதால் அவருடைய மகளை பாடசாலையில் இணைத்துக்கொள்ள பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கனேமுல்ல குடாபொல்லத்த பாடசாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக குறித்த மாணவியை பாடசாலைக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஆராய்வதற்காக அந்த மாணவியின் தாயார் ஊடகவியலாளர் குழுவொன்றை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற அவரால் அதிபரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ள இயலவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆசிரியர்கள், அதிபர் பாடசாலையில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
தாய்க்கு எச்.ஐ.வி : மகளை பாடசாலையில் இணைத்துக்கொள்ள பாடசாலை நிர்வாகம் மறுப்பு : இலங்கையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
March 19, 2017
Rating:

No comments:
Post a Comment