வடக்கு மக்களுக்கு என்னதான் பிரச்சினை? ஜாதிக ஹெல உறுமயவின் சந்தேகம்...
வடக்கு மக்களுக்கு அப்படி என்னதான் பிரச்சினைகள் காணப்படுகின்றன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தெற்கு மக்களுக்கு இல்லாத, வடக்கு மக்களுக்கு மட்டும் காணப்படும் பிரச்சினைகள் எவை என்பது தமக்கு புரியவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இணைத் தலைவர் ஹெடிகல்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகள் காணப்படுவதாக சில நீண்ட காலமாக கூறி வருகின்றனர். எனினும் தெற்கு மக்களுக்கு இல்லாத வடக்கு மக்களுக்கு மட்டும் காணப்படும் பிச்சினைகள் எவை என அடையாளப்படுத்தப்படவில்லை.
வடக்கில் நிலவி வரும் பொருளாதார, தொழில் வாய்ப்பு இன்மை, நீர்ப்பிரச்சினை போன்றன தெற்கு மக்களுக்கும் காணப்படுகின்றன.
வடக்கு மக்களுக்கு மட்டும் ஏதேனும் தனிப்பட்ட பிரத்தியேக பிரச்சினைகள் இருந்தால் அவற்றை மிகவும் கவனத்துடன் தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் முதலில் பிரச்சினைகள் எவை என்பது பற்றி சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு சொந்தமான அதிகளவான காணிகள் வடக்கு கிழக்கிலேயே காணப்படுகின்றன.
எனவே மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு என்னதான் பிரச்சினை? ஜாதிக ஹெல உறுமயவின் சந்தேகம்...
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment