செல்போன் போன்று பைபிளை பயன்படுத்துங்கள்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்....
நவீன காலத்தில் செல்போனை அடிக்கடி பயன்படுத்துவது போல கிறித்துவ மத நூலான பைபிளை அடிக்கடி படிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாடிகன் நகரில் வாரந்திர ஆசீர்வாதக் கூட்டம் நேற்று நடந்துள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் உலக கிறித்துவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், ‘தற்போதைய நவீன காலத்தில் செல்போனை மக்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக கிடைக்கப்பெறும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டு அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர்.
இதே போன்ற ஈடுப்பாட்டுடன் பைபிளையும் மக்கள் அடிக்கடி திரும்ப படிக்க வேண்டும்.
இம்முறைக் காரணமாக பைபிள் வாசகங்கள் அனைவரின் மனதிலும் நீங்காமல் நிலைத்திருக்கும்’ என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல், உலக மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஒவ்வொரு தம்பதியும் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இது எதிர்கால சந்ததியினர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை சூழலை விட்டுச்செல்லும் என போப் பிரான்சிஸ் இக்கூட்டத்தில் வலிறுத்தியுள்ளார்.
செல்போன் போன்று பைபிளை பயன்படுத்துங்கள்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்....
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment