மன்னார் மாந்தை மேற்கு பெரியமடு கிழக்கு கிராமத்தில் சிறப்பாக இடம் பெற்ற 'நெல் அறுவடை விழா' -(படம் இணைப்பு)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிழக்கு கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நெல் அறுவடை விழா' நிகழ்வு இன்று (20) திங்கட்கிழமை காலை அரசியல் பிரமுகர்கள் பங்கு பற்றலுடன் மிக பிரம்மாண்ட முறையில் இடம் பெற்றது.
வடமாகாண சபை உறுப்பினருர் றிப்கான் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 60 ஆண்டுகளின் பின்னர் நடை பெற்ற குறித்த நெல் அறுவடை விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பா. ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான குறித்த நெல் அறுவடை விழா நிகழ்வு யுத்தம் நிறைவு பெற்று நல்லாட்சி நிலவும் சந்தர்ப்பத்தில் தாம் வாழ்ந்த பாரம்பரிய கிராமங்களில் நடாத்துவது இன்று எமது நாட்டின் சுதந்திரத்தினையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் எடுத்துக்காட்டும் ஓர் நிகழ்வாக அமையப்பெற்றது முக்கிய ஒரு விடயமாகும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,,
உண்மையில் இந்த நிகழ்வு இங்கு நடத்தப்படுவது மனம் நிறைந்த சந்தோசத்தினை தருகின்றது.
எமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன் நாங்கள் எவ்வாறு இங்கு இருந்தோமோ அதே போன்று ஒரு நாளை இன்று நான் உணர்கிறேன்.
உண்மையில் இனம், மதம், மொழி, பிரதேசம் போன்ற அனைத்தும் கடந்து ஒரு சகோதரத்துவத்துடன் இந்த நிகழ்வினை நடாத்துவது எமது எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையானது சிறந்ததாக அமையும் என்பதில் ஒரு நம்பிக்கை தோன்றுகின்றது.
அது மட்டுமல்லாது இங்கு வருகை தந்துள்ள மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாணசபை பாரியளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இருந்தாலும் நாங்கள் எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
March 21, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 21, 2017
Rating:

No comments:
Post a Comment