வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு பாராட்டு!
அம்பாறை மாவட்டத்திலுள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் பின்தங்கிய கிராம வரலாற்றில் முதற்றடவையாக ஒரு மாணவி தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளார்.
புதியவளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் பயிலும் யோகநாதன் ஹைனியா என்ற மாணவியே இவ்விதம் 155 புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.
இப்பாடசாலையில் 12 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவி ஹைனியாவை கடந்தவாரம் இடம்பெற்ற நாவலர் வித்தியாலய விளையாட்டுப்போட்டியில் கௌரவித்துள்ளனர்.
அமைச்சர் தயாகமகேயின் இணைப்பாளர் வி.வினோகாந்த்தின் ஏற்பாட்டில் விழாவிற்கு பிரதம அதிதியாக வருகைதந்த கிழக்குமாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணாண்டோ குறித்த சாதனை மாணவிக்கு பதக்கமணிவித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளார்.
கௌரவ அதிதியாக அமைச்சர் தயாகமகேயின் இணைப்பாளர் வி.வினோகாந்த் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர் பொதுமக்கள் மாணவர்கள் பாடசாலைசமுகத்தினர் முன்னிலையில் பகிரங்கமாக சாதனை மாணவி ஹைனியா இவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளமை ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமும் ஊக்குவிக்கும் செயற்பாடாகுமென ஏற்பாட்டாளர் வி.வினோகாந்த் தெரிவித்தார்
வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு பாராட்டு!
Reviewed by NEWMANNAR
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment