அண்மைய செய்திகள்

recent
-

சவுதி அரேபியாவில் ரூ.300000 விற்கப்பட்ட பெண்: அனுபவிக்கும் கொடுமைகள்...


இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறான ஏஜண்ட்கள் மூலம் சவுதி அரேபியாவில் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் சல்மா பேகம் (39).

சல்மா, சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து அக்ரம் மற்றும் ஷாபி என்னும் ஏஜெண்டுகள் மூலம் கடந்த 21ஆம் திகதி சவுதிக்கு அனுப்பட்டார்.

அங்கு சல்மா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து வருவது தெரியவந்துள்ளது.

சல்மா ஓடியோ மூலம் தான் சவுதி அரேபியாவில் அனுபவிக்கும் கொடுமைகளையும், இந்த விடயத்தை இந்திய அரசிடம் சொல்லி தன்னை மீட்டும் படியும் தன் மகள் சமீனாவிடம் கூறியுள்ளார்.

இது குறித்து சமீனா கூறுகையில், எனது அம்மா சவுதி அரேபியாவில் சிக்கலில் உள்ளார். அவர் தாயகம் திரும்ப விரும்பியும், அவரின் ஸ்பான்சர் அவரை விட மறுக்கிறார்.

மேலும், சல்மா அவர் ஸ்பான்சரிடம் 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சமீனா கூறியுள்ளார்.

சல்மாவின் ஸ்பான்சர் அவர் மீது திருமண ஒப்பந்தம் போட்டதையடுத்து அதற்கு அவர் சம்மதிக்காததால் அவர் கொடுமைப்படுத்தபடுவதாகவும் சமீனா தெரிவித்துள்ளார்.

மேலும், எனது அம்மாவை தாயகம் கொண்டு வர தெலுங்கானா அரசும் மத்திய அரசும் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

சவுதி அரேபியாவில் ரூ.300000 விற்கப்பட்ட பெண்: அனுபவிக்கும் கொடுமைகள்... Reviewed by Author on April 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.