அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பூரண ஹர்த்தால்-(படங்கள் )

வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்களினால் இன்று வியாழக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

-குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீல மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வேளையற்ற பட்டதாரிகள் ஆகியோரினால் குறித்த போராட்டங்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வலி சுமந்த போராட்டங்களுக்கு பூரண ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று(27) வியாழக்கிழமை மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்,வர்த்தக சங்கம்,அரசியல் பிரமுகர்கள் குறித்த ஹர்த்தால் அனுஸ்ரிப்பிற்கு மன்னாரில் அழைப்பு விடுத்திருந்தனர்.

-இதற்கு அமைவாக மன்னாரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு,தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

-பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத நிலையில் பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அரச சார்பாற்ற திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பணியாளர்களின் வருகை குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

-மேலும் மன்னாரில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

மன்னார் வர்த்தக சங்கம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வர்த்தகர்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் மன்னார் பஸார் பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த போதும் ஒரு சில உணவகங்கள் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது உணவகங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து சக வர்த்தகர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

-மக்களின் வருகை குறைவடைந்த நிலையில் காணப்பட்ட்மையினால் மன்னாரின் இயல்பு நிலை பாதீப்படைந்தள்ளதோடு,மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் பூரண ஹர்த்தால்-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on April 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.