தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்?அடுத்தது என்ன?எனினும் தொனிப்பொருளில் வவுனியாவில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்?அடுத்தது என்ன?' எனும் தொனிப்பொருளில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நகர விருந்தினர் விடுதியில் இடம் பெறவுள்ளது.
தமிழ் மக்களின் மத்தியில் நலிவடைந்து வரும் தமிழ் தேசியவாதத்தை நிலை நிறுத்த வேண்டிய தார்மிக கடமையில் இருந்து தலைமைகள் நிலை தவறுவதாக எழும் வாதத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருங்கிணைந்த செயற்பாட்டை மையப்படுத்தி அரசியல் தலைமைகள், மதக்குருக்கள், புத்திஜீவிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியேரை உள்ளடக்கி குறித்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
-குறித்த நிகழ்வில் ஆயர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.எனவே அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்வதால் இக் கருத்துறவாடல் நிகழ்வில் கலந்து கௌ;ள விரும்புபவர்கள் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தொலைபேசி இலக்கமான 0778355464 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்?அடுத்தது என்ன?எனினும் தொனிப்பொருளில் வவுனியாவில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு.
Reviewed by NEWMANNAR
on
April 12, 2017
Rating:
No comments:
Post a Comment