ரத்தம் கொட்டக் கொட்ட.. வாயில் துணியுடன் விளையாடிய மெஸ்ஸி....
லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான 'எல்கிளாசிகோவில் பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸி ரத்தம் கொட்டக் கொட்ட வாயில் துணியுடன் விளையாடிய சம்பவம் வைரலாகியுள்ளது.
ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
போட்டியின் 20-வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும், ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் பலமாக தாக்கியது. இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
மருத்தவர்களின் சிகிச்சைக்கு பின்னர் வாயில் துணையை வைத்துக் கொண்டு களமிறங்கிய மெஸ்ஸி தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.
பின்னர் 92வது நிமிடத்தில் தனது வரலாற்று சாதனைமிக்க கோலை அடித்து பார்சிலோனா அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தம் கொட்டக் கொட்ட.. வாயில் துணியுடன் விளையாடிய மெஸ்ஸி....
Reviewed by Author
on
April 25, 2017
Rating:
Reviewed by Author
on
April 25, 2017
Rating:


No comments:
Post a Comment