பிரித்தானியா பொதுத்தேர்தல்: வேறு நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்கள் வாக்களிக்க முடியுமா?
15 வருடங்களுக்கு மேலாக வேறு நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரெசா மே நேற்று அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே 15 ஆண்டுகளாக வேறு நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்கள் வாக்களிக்க முடியாது என்ற சட்டம் அமுலில் உள்ளது.
இந்த சட்டம் அடுத்த தேர்தலில் மாற்றப்படும் என கடந்தாண்டு அரசு கூறி வந்தது.
ஆனால், திடீரென தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்ப்பட்டதால் அவர்களுக்கு இந்த தேர்தலிலும் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காது என தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரான்ஸின் பிரித்தானிய அமைப்பின் தலைவர் கிறிஸ்டோபர் கூறுகையில், பிரித்தானிய அரசு இந்த முறையும் வேறு நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
எங்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு மறந்து விட்டது என கூறியுள்ளார்.
பிரித்தானியா பொதுத்தேர்தல்: வேறு நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்கள் வாக்களிக்க முடியுமா?
Reviewed by Author
on
April 19, 2017
Rating:

No comments:
Post a Comment