1,000 இந்தியர்களுக்கு ஒவ்வொரு நாளும் விசா வழங்கும் சுவிஸ் அரசு.....
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு விசா வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தலைநகரமான டில்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் தான் இந்த விசா அனுமதியை அளித்து வருகிறது.
இந்தியாவில் ஏப்ரல் முதல் யூன் வரை கோடை காலம் என்பதால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியர்கள் பெருதும் விரும்புகின்றனர்.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுவிஸ் தூதரகத்தில் விசா கோரிய இந்தியர்களின் விண்ணப்பம் அதிகரித்ததால் கூடுதலாக 36 ஊழியர்களை நியமனம் செய்து விசா வழங்கும் பணியை வேகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு சுவிஸ் விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் 1780 இந்தியர்களுக்கும் விசா வழங்கப்பட்டது.
சுவிஸ் விசா பெற்றவர்களில் 80 சதவிகிதத்தினர் அந்நாட்டில் விடுமுறையை கழிக்க மட்டுமே விரும்பியுள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எந்த நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு மட்டும் சுவிஸ் தூதரகம் அதிகளவில் விசா வழங்கியுள்ளது.
மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1,07,000 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1,000 இந்தியர்களுக்கு ஒவ்வொரு நாளும் விசா வழங்கும் சுவிஸ் அரசு.....
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment