23 கிறித்துவர்கள் பலி பேருந்து மீது சரமாரி துப்பாக்கி சூடு:
எகிப்து நாட்டில் சாலையில் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 23 கொப்டிக் கிறித்துவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து தலைநகரமான கெய்ரோவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள மனியா என்ற நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Anba Samuel கிறித்துவ மடாலயத்திற்கு இன்று பேருந்தில் பயணம் செய்தபோது சில மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இது தீவிரவாத தாக்குதலா? அல்லது இச்சம்பவத்திற்கு பின்னால் பிற அமைப்பு உள்ளதா என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

23 கிறித்துவர்கள் பலி பேருந்து மீது சரமாரி துப்பாக்கி சூடு:
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment