சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி.....
சீனாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கம் காரணமாக சரிந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஆகும். சீனாவில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 90,000 பேர் பலியாகினர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி.....
Reviewed by Author
on
May 11, 2017
Rating:

No comments:
Post a Comment